வெள்ளி, 20 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Arun Prasath
Last Updated : சனி, 19 அக்டோபர் 2019 (11:20 IST)

நாங்குநேரி, விக்கிரவாண்டியில் வெளியூர்க்காரர்கள் இருக்ககூடாது..

நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதியில் வசிக்கும் வெளியூர்க்காரர்கள் இன்று மாலை 6 மணிக்குள் வெளியேற வேண்டும் என தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய தொகுதிகளில் வருகிற 21 ஆம் தேதி சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெறவிருப்பதால், தேர்தல் பிரச்சாரங்கள் சூடு பிடித்துள்ளன. இந்நிலையில் விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகள் 3 துணை ராணுவப்படை வீதம் மொத்தம் 6 துணை ராணுவப்படை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

நாங்குநேரி தொகுதியில் 299 வாக்குச்சாவடியும், விக்கிரவாண்டி தொகுதியில் 275 வாக்குச்சாவடிகளும் உள்ளன. இதில் நாங்குநேரி தொகுதியில் 50 வாக்குச்சாவடிகளும்,  விக்கிரவாண்டி தொகுதியில் 110 பேரும் வாக்குச்சாவடிகளும் பதற்றம் நிறைந்த வாக்குசாவடியாக காணப்படுவதாக தெரிகிறது.

இதைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கல்யாண மண்டபம், சமுதாய கூடம், தங்கும் விடுதிகள், விருந்தினர் இல்லம், ஆகிய இடங்களில் வெளியூர்காரர்கள் யாராவது தங்கியுள்ளனரா என கண்டறிந்து வருகின்றனர். மேலும் அத்தொகுதிகளிலிருந்து இன்று மாலை 6 மணிக்குள் வெளியூர்க்காரர்கள் வெளியேற வேண்டும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதசாகு தெரிவித்துள்ளார்.

கள்ள வாக்குகளிலிருந்து தடுப்பதற்காக இது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் எனவும் சிலரால் கூறப்படுகிறது. ஆளுங்கட்சியினர் தங்களது அதிகாரத்தை தவறாக பயன்படுத்த அதிக வாய்ப்பு இருப்பதாக கூடுதல் ராணுவ வீரர்களை பாதுகாப்பு பணியில் அமர்த்த வேண்டும் என திமுக காங்கிரஸ் தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.