வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : வியாழன், 22 ஆகஸ்ட் 2024 (17:12 IST)

த.வெ.க பாடலை பார்த்து கண் கலங்கிய புஸ்ஸி ஆனந்த்.! தேற்றிய விஜய்..!

Pussy Anand
தமிழக வெற்றிக் கழகத்தின்  பாடல் ஓடிக்கொண்டிருந்தபோது, புஸ்ஸி ஆனந்த் கண் கலங்கி அழுத புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.  
 
அரசியலில் எண்ட்ரி கொடுத்த நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்னும் கட்சியை தொடங்கினார்.  2026 ஆம் ஆண்டு வரவிருக்கும் தமிழக சட்டமன்ற தேர்தலை 324 தொகுதிகளிலும் சந்திக்க உள்ளதாக அறிவித்தார்.  
 
தற்போது தன்னுடைய கட்சி பணிகளில் தீவிர கவனம் செலுத்த துவங்கியுள்ள விஜய், இன்று பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில், தமிழக வெற்றிக் கழக கட்சியின் கொடி மற்றும்  பாடலை வெளியிட்டார். 
 
சிவப்பு மற்றும் மஞ்சள் நிறத்தில் இருந்த தமிழக வெற்றிக் கழக கொடியின் நடுவே, இரண்டு யானைகள் நிற்பது போலவும், நடுவே வாகை மலர் புகைப்படமும் இடம்பெற்றிருந்தது.  தொடர்ந்து, கட்சியின் கொடி பாடலான 'தமிழன் கொடி பறக்குது' என்ற பாடல் வெளியிடப்பட்டது.


அப்போது விஜய் தன்னுடைய கட்சி பாடலை கீழே இருந்து பார்த்து கொண்டிருந்த போது, அவரது அருகில் அமர்ந்திருந்த கட்சியின் பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த் திடீரென கண்கலங்கி அழுதார். பின்னர் விஜய் அவரை தேற்றினார். இது குறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.