செவ்வாய், 21 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By SInoj
Last Updated : புதன், 10 ஏப்ரல் 2024 (23:50 IST)

விஜய்-69’’ படத் தயாரிப்பாளரை நீக்கிய விஜய்?...என்ன நடந்தது?

vijayy
விஜய்யின் 69 வது படம் அவரது கடைசிப் படம் என்பதால் இப்படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
 
இப்படத்தை ஆர்.ஆர்.ஆர்.படத் தயாரிப்பாளர் தயாரிக்கவுள்ளதாக தகவல் வெளியானது.
இந்த நிலையில், விஜய் 69 படத் தயாரிப்பாளர் வெளியேற்றப்பட்டதாக தகவல் வெளியாகிறது.
 
விஜய் ஆர்.ஆர்.ஆர் பட தயாரிப்பாளருக்கு கால்ஷீட் தருவதாக ஒப்புக் கொண்டதாக கூறப்படுகிறது.
 
இதுவரை பேச்சளவில் மட்டும்தான் நடந்துள்ள நிலையில், இன்னும் அக்ரிமண்ட் எதுவும் கையெழுத்தாகவில்லை என கூறப்படுகிறது.
 
இந்த நிலையில், படத்தயாரிப்பு நிறுவனம் இப்பட சேட்டிலைட் உரிமை  வரை பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இதை சற்றும் எதிர்பார்க்காத விஜய். தன் படத்திற்கு இதுவரை இப்படி யாரும் செய்ததில்லை என்பதால் அப்செட்டில் தயாரிப்பாளரை நீக்கியுள்ளாராம். 
 
இந்த நிலையில், ஹெச்.வினோத்- விஜய் கூட்டணி உறுதியாகியுள்ள நிலையில், மிகப்பெரிய  பட்ஜெட் கொண்ட இப்படத்திற்கு பிரபல நிறுவனமான சன்பிக்சர்ஸ் நிறுவனத்துடன் தான் அடுத்த படத்திற்கு கூட்டணி வைக்கப் போவதாக கூறப்படுகிறது. 
 
ஆனால் விஜய் அரசியல் கட்சி ஆரம்பித்துள்ள  நிலையில், சன்பிக்சர்ஸ் இப்படத்தை தயாரிக்குமா? என கேள்வி எழுந்துள்ளது.