1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 9 மே 2024 (10:03 IST)

சவுக்கு சங்கரை கைது செய்ய சென்னை சைபர் கிரைம் போலீசார் தீவிரம்.. கோவைக்கு விரைவு..!

Savuku Sankar
சவுக்கு சங்கரை கைது செய்ய சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் தீவிரமாக இருப்பதாகவும் அதிகாரிகள் சிலர் கோவை மத்திய சிறைச்சாலைக்கு சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது 
 
சவுக்கு சங்கர் மீது ஏற்கனவே பெண் காவல்துறை அதிகாரிகளை சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்காக கைது செய்யப்பட்ட நிலையில் அதன் பின்னர் அவர் மீது கஞ்சா வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது தெரிந்தது 
 
இந்த நிலையில் பெண் காவல்துறை அதிகாரி ஒருவர், பெண் பத்திரிகையாளர் ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் மேலும் இரண்டு வழக்கு பதிவு செய்த சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் அவரை கைது செய்ய திட்டமிட்டுள்ளனர் 
 
இதனை அடுத்து கோவை மத்திய சிறை அதிகாரிகளிடம் சவுக்கு சங்கரை கைது செய்வதற்கான ஆவணங்களை கொடுத்ததாகவும் இதனை அடுத்து இன்னும் சில நிமிடங்களில் சென்னை மத்திய மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் சவுக்கு சங்கரை இரண்டு வழக்குகளில் கைது செய்ய இருப்பதாக கூறப்படுகிறது 
 
Edited by Mahendran