கோவை பாரதியார் பல்கலையில் AI படிப்பு.. மாணவர்கள் ஆர்வம்..!
கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் AI என்று கூறப்படும் செயற்கை நுண்ணறிவு படிப்பு அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த கோர்ஸில் சேர மாணவர்கள் ஆர்வம் காட்டி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது
கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் துறை சார்பாக செயற்கை நுண்ணறிவு படிப்பு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகள் முதுநிலை பட்டப்படிப்பில் சேர தகுதியானவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பம் விண்ணப்பிக்கலாம் என்றும் கல்வி தகுதி, கட்டணம் ஆகிவை குறித்த விவரங்கள் பாரதியார் பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது
இதனை அடுத்து மாணவர்கள் பலர் செயற்கை நுண்ணறிவு படிப்பில் சேர்வதற்கு ஆர்வம் காட்டி வருவதாக கூறப்படுகிறது. செயற்கை நுண்ணறிவு படிப்பை படித்தால் எதிர்காலத்தில் நல்ல வேலை கிடைக்கும் என்று மாணவர்கள் இந்த கோர்ஸ் சேர ஆர்வம் காட்டி வருவதாக கூறப்படுகிறது
கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த படிப்புக்கு ஜூன் 6-ம் தேதிக்குள் விண்ணப்பங்கள் பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது
Edited by Mahendran