திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 18 டிசம்பர் 2022 (13:32 IST)

எங்ககிட்டயும் அணு ஆயுதம் இருக்கு.. மறந்துடாதீங்க! – இந்தியாவுக்கு பாக். அமைச்சர் எச்சரிக்கை!

Shazia marri
பாகிஸ்தானிடம் அணு ஆயுதம் உள்ளதை சுட்டிக்காட்டி பாகிஸ்தான் மந்திரி இந்தியாவை அச்சுறுத்தும் விதமாக பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் ஐநா சபையில் பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி பூட்டோவுக்கும், இந்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கும் இடையே நடந்த விவாதம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதன்பின்னர் பிரதமர் மோடி குறித்து பூட்டோ பேசியதற்கு பலரும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது பாகிஸ்தான் மக்கள் கட்சி மந்திரி ஷஷியா மரி செய்தியாளர்கள் சந்திப்பில் “பாகிஸ்தானிடமும் அணு ஆயுதம் உள்ளதை இந்தியா மறந்துவிடக்கூடாது. எங்கள் அணு ஆயுத நிலைபாடு அமைதியாக இருப்பதற்கு அல்ல. பிரச்சினை என்றால் பின்வாங்க மாட்டோம். இஸ்லாமிய மதத்தை இந்தியா தீவிரவாதத்தோடு சித்தரிக்கிறது” என பேசியுள்ளார்.

தொடர்ந்து பாகிஸ்தான் அரசு அமைச்சர்கள் இந்தியாவை சீண்டும் விதமாக பேசி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Edit By Prasanth.K