1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: ஞாயிறு, 20 மே 2018 (09:05 IST)

விபத்தில் சிக்கியவர்களை மீட்க சென்ற 3 பேர் பரிதாப பலி

விபத்தில் சிக்கியவர்களை மீட்க சென்ற 3 பேர் மற்றொரு விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் இன்று காலை பேருந்து ஒன்று பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக பேருந்து விபத்துக்குள்ளானதில் பலர் படுகாயமடைந்தனர்.
 
இதனையடுத்து விபத்தில் சிக்கியவர்களை மீட்க ஒரு குழு சென்றது. அப்போது மற்றொரு பேருந்து மோதியதில் மீட்க சென்ற 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
 
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புத் துறையினர் இரு விபத்துகளில் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
 
விபத்தில் சிக்கியவர்களை மீட்க சென்றவர்கள் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.