1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : சனி, 8 ஜூன் 2019 (13:51 IST)

உடல்களை ஒன்றாகப் புதையுங்கள்! கடிதம் எழுதிவைத்து கள்ளக்காதல் ஜோடி தற்கொலை...

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் ஏரிப்புறக்கரை பகுதியில் வசித்து வந்தவர் ஜெயக்குமார். இவரது மனைவி  கலைச்செல்வி (32). இவர் அங்குள்ள சத்துணவு மையத்தில் அமைப்பாளராக வேலைசெய்துவந்தார்.
இந்தத் தம்பதிக்கு இரு குழந்தைகள் உள்ளனர். இருவரும் அங்குள் அரசுப் பள்ளியில் படித்துவருகின்றனர். 
 
இந்நிலையில் வடிவேல் (32) என்பவர் அதே பகுதியின் மீன் பிடிக்கும் தொழில் செய்துவந்தார். இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது. ஆனால் இவரும் கலைச்செல்வியும் ஓராண்டாக கள்ளக்காதலில் ஈடுபட்டுள்ளனர்.
 
இதுகுறித்து அறிந்த ஜெயக்குமார் கலைச்செல்வியைக் கண்டித்துள்ளார்.இதையடுத்து கலைசெல்வியும், வடிவேலும் கடந்த 3 நாட்களுக்கு முன்னர் வீட்டைவிட்டு வெளியேறினர்.
 
பின்னர் நேற்று மதியம் கிழக்குக் கடற்கரை சாலை அருகில் வடிவெல் விஷம் குடித்து இறந்துவிட்டார். கலைச்செல்வி உயிருக்குப் போராடிய நிலையில் அவரை மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்றனர்.ஆனால் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
 
வடிவேலு தன் பாக்கெட்டில் ஒரு கடிதம் வைத்திருந்தார். அதில் நானும் கலைச்செல்வியும் தற்கொலைசெய்து கொள்கிறோம். எங்கள் தற்கொலைக்கு யாரும் காரணம் இல்லை, அன்பால் இணைந்த எங்களால் இங்கு வாழமுடியவில்லை என்று எழுதியிருந்ததாகத் தெரிகிறது.
 
தற்போது இந்த தற்கொலைகுறித்து போலிஸார் விசாரித்துவருகின்றனர். கள்ளக்காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுதியுள்ளது.