1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. BSP member murder in tiruvallur

திருவள்ளூர் அருகே பகுஜன் சமாஜ் கட்சி பிரமுகர் வெட்டிக் கொலை

பகுஜன்
திருவள்ளூர் அடுத்த உளுந்தை காலனியை சேர்ந்தவர் தயாளன் என்பவரது  மகன் பிரபாகரன்(28). இவர் பகுஜன் சமாஜ் கட்சியின் இளைஞரணி தொகுதி செயலாளராக இருந்தார்.

நேற்று இரவு உளுந்தையில் உள்ள தனக்கு சொந்தமான குடோனுக்கு மோட்டார் சைக்கிளில் சென்ற அவர் அங்கிருந்த காவலாளியிடம் மது வாங்கி வருமாறு கூறியுள்ளார். பின்னர் காவலாளி மற்றும் அதே பகுதியை சேர்ந்த நண்பர்கள் இருவருடன் சேர்ந்து நான்கு பேரும் மது அருந்தி உள்ளனர். நள்ளிரவு 12 மணிக்கு அங்கு வந்த 4 பேர் கொண்ட கும்பல், பிரபாகரனை அரிவாள்  உள்ளிட்ட ஆயுதங்களால் சரமாரியாக வெட்டினர். இதில், சம்பவ இடத்திலேயே பிரபாகரன் உயிரிழந்தார்.இதனைக் கண்ட உடனிருந்த நண்பர்கள் அங்கிருந்து ஓடினர்.

இதுகுறித்து திருவள்ளூர் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்
About Writer
Bala