பி.எஸ்.என்.எல் டவர் வேண்டும்: சாலை மறியல் போராட்டம் செய்த பொதுமக்கள்..!
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் பிஎஸ்என்எல் டவர் வேண்டும் என கிராம மக்கள் திடீரென சாலை மறியல் செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள கோடுபட்டி என்ற கிராமத்தில் செல்போன் வைத்திருக்கும் மக்கள் சிக்னல் கிடைக்காமல் தங்கள் உறவினர்கள், குடும்பத்தினரிடம் தொடர்பு கொள்ள முடியாத நிலையில் உள்ளனர்.
இந்த பகுதியில் பிஎஸ்என்எல் டவர் அமைக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் சில ஆண்டுகளாக கோரிக்கை விடுத்த நிலையில், அதிகாரிகள் இதனை கண்டு கொள்ளவில்லை. இந்த நிலையில் இன்று காலை திடீரென முப்பதுக்கும் மேற்பட்டோர் இருசக்கர வாகனங்களை சாலையின் நடுவில் நிறுத்தி மறியல் போராட்டம் செய்தனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இது குறித்து பென்னகரம் போலீசார் சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பிஎஸ்என்எல் அதிகாரிகளிடம் இது குறித்து கோரிக்கை மனு அளிக்க போலீசார் அறிவுறுத்தியதை அடுத்து போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர். இதனால் சில மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Edited by Mahendran