வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : திங்கள், 23 செப்டம்பர் 2024 (15:34 IST)

நாங்கள்தான் உண்மையான கண்ணப்பர் திடல் மக்கள்.! வீடு வழங்க கோரி சாலை மறியல் - தள்ளு முள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு.!!

Protest
அடுக்குமாடி குடியிருப்பு வழங்க கோரி சாலை மறியலில் ஈடுபட்ட சென்னை கண்ணப்பர் திடலை சேர்ந்த மக்களை போலீசார் கைது செய்தனர்.
 
சென்னை 58 வது வட்டத்தில், உள்ள கண்ணப்பர் திடலில் வீடற்றோர் விடுதியில் தங்கி இருக்கும் 114 குடும்பங்களுக்கு தமிழ்நாடு நகர்ப்புற மேம்பாட்டு வாரியத்தின் மூலம், மூலக்கொத்தளம் பகுதியில் உள்ள புதிய அடுக்குமாடி குடியிருப்பு ஆணை வழங்கப்பட்டுள்ளது.
 
நேரு விளையாட்டு அரங்கம் அமைக்கப்பட்ட பொழுது, அதை சுற்றி இருக்கக்கூடிய பகுதிகளில் இருந்த மக்கள் வீடற்றோர் விடுதியில் தங்க வைக்கப்பட்டனர். இதில் 114 குடும்பங்கள், பாதிக்கப்பட்டு பல்வேறு இயற்கை சீற்றங்களுக்கு  அவதிப்பட்டனர். 
 
Udayanithi
இவர்களுக்கு தற்போது குடியிருப்பு கட்டிக் கொடுக்கப்பட்டு அதற்கான ஆணை விளையாட்டு துறை *அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். அப்போது பேசிய அவர் இந்த ஆண்டு பருவ மழை காலத்திற்குள் வீடு கட்டித் தரப்படும் என்ற உத்தரவாதம் நிறைவேற்றப்பட்டதாக  தெரிவித்தார். பல ஆண்டு கால கனவுகள் இன்று வீடாக தங்களுக்கு கிடைத்திருப்பதாக மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். 
 
இதற்கிடையே உண்மையான கண்ணப்பர் திடலில் இருக்கும் மக்கள்,  40 ஆண்டு காலமாக இருக்கும் எங்களுக்கு பலமுறை வீடு கட்டி கொடுக்கும்படி கேட்டும், வீடு கொடுக்காமல் இருப்பதாலும் உண்மையான கண்ணப்பர் திடல் வசிக்கும் தங்களை அமைச்சரிடம் கோரிக்கை வைக்க விடவில்லை என கூறி, காவல்துறையிடம் வாக்குவாதம் செய்தனர்.  

 
அதைத்தொடர்ந்து காவல் துறையின் தடுப்பை மீறி நேரு விளையாட்டு அரங்கம் பிரதான சாலையில் மறியல் போராட்டத்தில் கண்ணப்பர் திடல் மக்கள் ஈடுபட்டனர். அப்போது காவல்துறையினர் அவர்களை அப்புறப்படுத்த முயன்ற போது, இரு தரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்தனர்.