ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 11 அக்டோபர் 2024 (15:20 IST)

பக்கவாதத்தை சரிசெய்ய பரிகாரம்!? 8 லட்ச ரூபாய் அபேஸ் செய்த தம்பதி கைது!

தருமபுரியில் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவரை குணப்படுத்துவதாக கூறி 8 லட்சம் மோசடி செய்த மாந்த்ரீக தம்பதியை போலீஸார் கைது செய்துள்ளனர்.

 

 

தருமபுரி மாவட்டம் வெங்கட்டம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சுபா. தற்போது பெங்களூரில் சுபா வசித்து வரும் நிலையில் அவரது கணவர் கடந்த சில ஆண்டுகள் முன்பாக பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு நடக்க முடியாமல் உள்ளார். இந்நிலையில் அவரது வாட்ஸப் செயலிக்கு ஆன்லைன் மூலம் ஜோதிடம் பார்ப்பதாக ஒரு விளம்பரம் வந்துள்ளது.

 

அந்த எண்ணில் அவர் தொடர்பு கொண்டபோது அதில் பேசிய சொர்ணகுமார் என்பவரும், அவரது மனைவி ஸ்ரீதேவியும் பேசியுள்ளனர். அவர்கள் ‘உங்கள் கணவருக்கு யாரோ செய்வினை செய்துள்ளார்கள். அதனால்தான் அவருக்கு பக்கவாதம் ஏற்பட்டுள்ளது. செய்வினையை எடுத்தால் அவர் குணமாகி விடுவார். ஆனால் அதற்கு சில லட்சங்கள் செலவாகும்’ என கூறியுள்ளனர்.
 

 

அதை நம்பி சுபாவும் அவர்களிடம் 8 லட்ச ரூபாய் பணம் கொடுத்துள்ளார். ஆனால் அதன் பின்னர்தான் அவர்கள் ஏமாற்று பேர்வழிகள் என தெரிய வந்துள்ளது. இதுகுறித்து தருமபுரி சைபர் க்ரைம் போலீஸில் சுபா புகார் அளித்த நிலையில் மோசடி தம்பதிகளை காவல்துறை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

 

Edit by Prasanth.K