1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வியாழன், 1 ஆகஸ்ட் 2019 (10:53 IST)

முடங்கியது பிஎஸ்என்எல் சேவை: 60 டவர்கள் பாதிப்பு!!

சென்னை பாரிமுனையில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலகத்தில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக பிஎஸ்என்எல் சேவை முடங்கியுள்ளது. 
 
பாரிமுனை கிருஷ்ணன் கோயில் பகுதியில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலகத்தில் அதிகாலை 5.30 மணியளவில் தீ பிடித்தது. முதல் தளத்தில் தீ பிடித்ததாகவும் பின்னர் இந்த தீ மளமளவென அடுத்தடுத்த மாடிகளுக்கும் பரவியதாகவும் தீயணைப்பு துறைக்கு தகவல் வந்தது. 
 
இந்த தகவலறிந்து 8 வாகனங்களில் விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் ஒரு மணி நேரத்துக்கும் மேலாகப் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். இந்த தீ விபத்து காரணமாக அப்பகுதி முழுக்க புகை மூட்டமாக காணப்படுகிறது. 
தீ விபத்தில் சர்வர்கள் சேதமடைந்துள்ளதால் பூக்கடை, துறைமுகம், திருவொற்றியூர் ஆகிய பகுதிகளில் பிஎஸ்என்எல் சேவை முடங்கியுள்ளது. அதோடு வடசென்னை பகுதி செல்போன், லேண்ட்லைன், பிராட்பேண்ட் ஆகிய சேவைகளும் பதிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
தீ விபத்தால் 60 பிஎஸ்என்எல் டவர்கள் பாதிப்படைந்துள்ளது, சுமார் 65,000 வேண்ட்லைன் சேவை முடங்கியுள்ளது. அதோடு பிஎஸ்என்எல் கட்டிடத்தில் உள்ள தமிழக அரசின் தகவல் மைய சர்வருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்.