1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 21 மார்ச் 2023 (11:38 IST)

பிஎஸ்என்எல் பிராட்பேண்ட் இணைப்புக்கான புதிய சலுகை திட்டம் அறிமுகம்!

பிஎஸ்என்எல் பிராட்பேண்ட் இணைப்பு பெறும் வாடிக்கையாளர்களுக்கு தரைவழி தொலைபேசி எண் தரப்படும். மேலும் அதிவேக இன்டர்நெட் மற்றும் அளவில்லா அழைப்பு வழங்கப்படும். அதுமட்டுமின்றி இந்த சலுகைத் திட்டத்தில், 6 மாதங்கள் வரை கட்டணத்தில் ரூ.200 தள்ளுபடி செய்யப்படும்
 
பிஎஸ்என்எல் பிராட்பேண்ட் இணைப்பு பெறும் வாடிக்கையாளர்களுக்கு 6 மற்றும் 12 மாத சந்தா செலுத்தினால் வைஃபை ஆப்டிகல் மோடம் இலவசமாக வழங்கப்படும். மேலும் நிறுவுவதற்கான கட்டணம் ரூ.500 ரத்து செய்யபப்டும்
 
பிஎஸ்என்எல் பிராட்பேண்ட் இணைப்பில் சூப்பர் ஸ்டார் பிரீமியம் பிளஸ் ரூ.999 திட்டத்தின்கீழ், 300-க்கும் மேற்பட்ட டிவி சேனல், 500-க்கும் டிவி நிகழ்ச்சிகளை கண்டுகளிக்கலாம்.
 
இத்திட்டங்கள் குறித்து கூடுதல் விவரங்கள் அறிய https://bookmyfiber.bsnl.co.in என்ற இணைய தளத்தைப் பார்க்கலாம் என பிஎஸ்என்எல் தெரிவித்துள்ளது.
 
Edited by Mahendran