செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Updated : வெள்ளி, 29 ஜூலை 2022 (15:38 IST)

தமிழ்நாட்டில் 534 கிராமங்களில் பி.எஸ்.என்.எல். 4ஜி சேவை : மத்திய அரசு தகவல்

bsnl
தமிழ்நாட்டில் 534 கிராமங்களில் பிஎஸ்என்எல் 4ஜி சேவை அளிக்கப்பட இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது 
 
பிஎஸ்என்எல் நிறுவனத்தில் தற்போது வாடிக்கையாளர்கள் அதிகம் ஆகி கொண்டே வருகின்றனர் என்பதும் இதனை அடுத்து வாடிக்கையாளர்களை திருப்திப்படுத்த கிராம பகுதிகளில் 4ஜி சேவை செய்ய பிஎஸ்என்எல் நிறுவனம் முடிவு செய்து இருப்பதாகவும் கூறப்பட்டது.
 
இதற்கு மத்திய அமைச்சரவை சமீபத்தில் ஒப்புதல் அளித்திருந்தது. இந்த நிலையில் நாடு முழுவதும் விரைவில் 24 ஆயிரத்து 650 கிராமங்களுக்கு பிஎஸ்என்எல் 4ஜி சேவை அளிக்கப்பட உள்ளது. அதில் தமிழ்நாட்டில் உள்ள 534 கிராமங்களும் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

அரியலூர், செங்கல்பட்டு, கோவை, கடலூர், ஈரோடு, மதுரை, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், கரூர், கிருஷ்ணகிரி உள்பட மொத்தம் 31 மாவட்டங்களில் உள்ள 534 கிராமங்களில் 4ஜி சேவை அளிக்கப்பட இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.