1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Brothers assassinated himself in Dindigul

சண்டை சேவலை திருடிய அண்ணன்; குத்தி கொன்ற தம்பி! – திண்டுக்கல் அருகே அதிர்ச்சி சம்பவம்!

Tamilnadu
திண்டுக்கல் அருகே சண்டை சேவலை திருடிய விவகாரத்தில் தம்பியே அண்ணனை குத்தி கொன்ற விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் அருகே உள்ள வீ.கல்லுப்பட்டியை சேர்ந்தவர் முனியாண்டி. இவருக்கு 17 வயதில் தம்பி ஒருவரும் உள்ளார். முனியாண்டிக்கும், அவரது தம்பிக்கும் அடிக்கடி பல விவகாரங்களில் சண்டை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

முனியாண்டியின் தம்பி சண்டை சேவல் ஒன்று வளர்த்து வந்துள்ளார். அது சில தினங்களுக்கு முன்பு காணாமல் போயுள்ளது. அதை முணியாண்டிதான் திருடினார் என தெரியவரவும் ஆத்திரத்தில் சென்ற தம்பி, அண்ணன் முனியாண்டியை கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார். இதனால் ரத்த வெள்ளத்தில் சரிந்த முனியாண்டியை மருத்துவமனை கொண்டு சென்றுள்ளனர். ஆனால் போகும் வழியிலேயே அவர் இறந்துள்ளார்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் முனியாண்டியின் தம்பி 18 வயதிற்கு உட்பட்டவர் என்பதால் சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் அனுமதித்துள்ளனர்.
About Writer
Prasanth Karthick
அடுத்த கட்டுரையில்
அவங்களுக்கு அரிசி, கோதுமை மட்டும்தான்; உங்களுக்குதான் எல்லாம்! – அமைச்சர் காமராஜ்