1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Updated : சனி, 24 செப்டம்பர் 2022 (15:15 IST)

விக்னேஷ் சிவன் - நயன்தாரா திருமண வீடியோ: நெட்பிளிக்ஸ் வெளியிட்ட டீசர்!

nayan marriage
விக்னேஷ் சிவன் - நயன்தாரா திருமண வீடியோ: நெட்பிளிக்ஸ் வெளியிட்ட டீசர்!
கடந்த ஜூன் மாதம் இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நடிகை நயன்தாரா திருமணம் நடந்தது என்பதும் வீடியோ ரிலீஸ் உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் 25 கோடி ரூபாய்க்கு பெற்றது என்றும் கூறப்பட்டது
 
இந்த நிலையில் இந்த திருமண வீடியோ விரைவில் வெளியாகும் என்று கூறப்பட்ட நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் புரமோ வீடியோ ஒன்றை நெட்பிளிக்ஸ் வெளியிட்டது
 
இந்த நிலையில் சற்று முன்னர் இந்த வீடியோவின் டீசரை நெட்பிளிக்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகிய இருவரும் தங்களது காதல் அனுபவங்களை கூறியுள்ளனர் 
 
மேலும் திருமணம் குறித்த காட்சிகள் அந்த வீடியோவில் உள்ளதை அடுத்து அந்த திருமணத்தின் முழு வீடியோவை பார்த்த ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது