திருத்தவே முடியாது ! லஞ்சம் வாங்கிய ’அரசு அதிகாரி’ ... பதுங்கிப் படித்த லஞ்ச ஒழிப்புத் துறை
வாரிசு உரிமைச் சான்று வழங்க ரூ. 10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மயிலாப்பூர் வட்டாட்சியரை , லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் பதுங்கி இருந்த பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை,மந்தைவெளியைச் சேந்த ஜெகதீஸ்வரி என்பவருக்கு வாரிசு உரிமைச்சான்று வழங்க அவரது சகோதரர் ரவிச்சந்திரனிடம் , தாசில்தார் சுப்பிரமணியம் ரூ. 25 ஆயிரம் கேட்டதாகத் தெரிகிறது.
இந்நிலையில், ரவிச்சந்திரம் ரூ.10 ஆயிரம் தருவதற்கு ஒப்புக்கொண்டதாகத் தெரிகிறது. இதனைத்தொடர்ந்து கடந்த 6 ஆம் தேதி 5 ஆயிரம் ரூபாயை ரவிச்சந்திரன் கொடுத்தபோது, அதை தாசில்தார் வீசியதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில், ரவிச்சந்திரன் லஞ்ச ஒழிப்புத்துறைக்குச் சென்று, லஞ்ச ஒழிப்பு போலீசாரின் ஆலோசனைப்படி ரசாயணம் தடவிய பணத்தை கொடுத்தபோது, ரவிச்சந்திரனையும் கைது செய்ததாக தகவல் வெளியாகிறது. மேலும் அலுவலகத்தில் கணக்கில் வராத ரூ 40 ஆயிரம் பறிமுதல் செய்யபட்டுள்ளது.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.