திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 18 நவம்பர் 2019 (21:58 IST)

அமெரிக்காவில் இருந்து திரும்பியவுடன் ரஜினியை கண்டித்த ஓபிஎஸ்

அதிர்ஷ்டத்தை நம்பி அதிமுக இல்லை என்றும், ரஜினிகாந்த் கூறிய கருத்தை வன்மையாக கண்டிக்கிறேன் என்றும் அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பிய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சென்னை விமான நிலையத்தில் பேட்டி அளித்தார்
 
நேற்று நடைபெற்ற ‘கமல்ஹாசன் 60’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய ரஜினிகாந்த், ‘எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக ஆட்சி, நான்கைந்து மாதங்களில் கவிழ்ந்துவிடும் என்றே அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் அதிசயம் நடந்து, அற்புதம் நடந்து அந்த ஆட்சி தொடர்ந்து கொண்டே உள்ளது. இந்த அதிசயம் நேற்றும் நடந்தது, இன்றும் நடந்து கொண்டிருக்கின்றது, நாளையும் நடக்கும் என்று கூறினார்.
 
ரஜினியின் இந்த கருத்தை அமைச்சர் ஜெயகுமார் உள்பட அதிமுகவினர் பலர் கண்டித்தனர். இந்த நிலையில் இன்று அமெரிக்கா சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு சற்றுமுன் சென்னை திரும்பிய துணை முதல்வர் ஓபிஎஸ் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசியபோது, ‘முதலமைச்சர் பழனிசாமி குறித்து ரஜினி பேசிய கருத்துக்கு தான் கண்டனம் தெரிவிப்பதாகவும், அதிர்ஷ்டத்தை நம்பி அதிமுக என்றுமே இருந்தது இல்லை கூறினார். மேலும் தன்னுடைய அமெரிக்க சுற்றுப்பயணம் வெற்றிகரமாக இருந்ததாகவும், அமெரிக்கவாழ் தமிழர்கள் தமிழகத்தில் தொழில் தொடங்க ஆர்வத்துடன் இருப்பதாகவும் அவர் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்தார்