வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 16 ஜூலை 2018 (19:26 IST)

மோடி மிகவும் நல்லவர் : நீட் தேர்வு தேவை : முட்டுக்கொடுக்கும் பிராமணர் சங்கம்

தமிழ்நாடு பிராமணர் சங்கத்தின் சார்பில், கரூர் மாவட்ட தாம்ப்ராஸ் சார்பாக 4 வது ஆண்டாக இந்த கரூர் மாவட்டத்தில் அந்த சமூகத்தினை சார்ந்த மாவட்ட அளவில் 10, 12 ஆம் வகுப்பு சி.பி.எஸ்.இ மற்றும் சமஸ்கிருதத்திலும் முதல் மூன்று மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளையும் ஊக்குவிக்கும் விதமாக பாராட்டி ஊக்கத்தொகையும், சான்றிதழ்களும், கேடயமும் வழங்கப்பட்டது. 

 
தமிழ்நாடு பிராமணர் சங்கத்தின் தாம்ப்ராஸ் மாநிலத்தலைவர் திருவொற்றியூர் ஸ்ரீ என்.நாராயணன்  அனைவரையும் பாராட்டி, சான்றிதழ்களை வழங்கினார். இதனையடுத்து தமிழ்நாடு பிராமணர் சங்கத்தின் கரூர் மாவட்ட நிர்வாகிகளை கெளரவித்தார். 
 
இந்நிகழ்ச்சியினை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த, நாராயணன் ”ஒரு செய்தியாளர் ஒருவர் பேட்டி எடுக்கும் போது, தங்களுக்கு என்ன பிடிக்கும் என்று கேட்டுள்ளார். அதற்கு அவர் என்ன பிடிக்கும் என்ன நூல் பிடிக்கும் என்று கூறி இருக்க வேண்டும் ஆனால் பூணுல் குறித்து பேசியதற்கு அப்போதும் கண்டனம் தெரிவித்தோம், இப்போதும் கரூர் மாவட்ட கிளையின் சார்பாகவும் கண்டனம் தெரிவிக்கிறோம்.
 
தற்போது மத்திய அரசின் பிரதமர் மோடியில் திட்டங்கள் மிகவும் அற்புதமான திட்டங்களை தீட்டி வருகின்றார். தமிழகத்தில் மோடியின் திட்டங்கள் பெருமளவில் வரவேற்பு பெற்றுள்ளன. ஆகவே, கட்சி சார்பற்று பிரதமர் மோடி மிகவும் அவர் சிறப்பாக செயலாற்றி வருகின்றார் நீட் தேர்வு மிகவும் தேவை, இனி லட்சக்கணக்கான மாணவ, மாணவிகள் இனி எழுத உள்ளனர். 
 
பேட்டி : திருவொற்றியூர் ஸ்ரீ.N.நாராயணன் – மாநிலத்தலைவர் – தமிழ்நாடு பிராமணர் சங்கம் (தாம்ப்ராஸ்) 
சி - ஆனந்த்குமார்