வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 3 ஜூலை 2018 (11:52 IST)

பூணூல் குறித்து சர்ச்சை கருத்து: கமல்ஹாசனுக்கு பிராமணர் சங்கம் கண்டனம்

நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் இந்து மதம் குறித்த சர்ச்சைக்குரிய கருத்துக்களை அவ்வப்போது கூறி வருவது வழக்கம். அதே நேரத்தில் தான் எந்த ஆன்மீகவாதிகளுக்கும் எதிரியல்ல என்றும், மகள் ஸ்ருதிஹாசன் உள்பட கடவுள் நம்பிக்கை உள்ளவர்களை தான் அவமதித்தது இல்லை என்ற தற்பெருமையையும் அவ்வப்போது சுட்டி காட்டுபவர்
 
இந்த நிலையில் சமீபத்தில் டுவிட்டரில் ரசிகர் ஒருவர் கமல்ஹாசனிடம், 'நீங்கள் படித்த நூலில் உங்களை மிகவும் பாதிப்பை உண்டாக்கிய நூல் எது கமல்ஹாசன் ஐயா? என்று கேள்வி கேட்டார். 'நான் தவிர்த்த நூல் ஒன்று இருக்கிறது, அது என்னை மிகவும் பாதித்த நூல், “பூணூல் “ அதனாலேயே அதை தவிர்த்தேன்' என்று இந்த கேள்விக்கு சற்றும் தொடர்பில்லாத ஒரு பதிலை கமல்ஹாசன் தெரிவித்தார்
 

கமல்ஹாசனின் இந்த கருத்துக்கு  தமிழ்நாடு பிராமணர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. பூணூல் குறித்து கீழ்த்தரமாக விமர்சித்த பிராமணகுல துரோகி நடிகர் கமல்ஹாசனை கண்டிக்கின்றோம் என்றும், பூணூலை குறைசொல்ல கமலுக்கு என்ன தகுதி இருக்கிறது என்றும் நடிகர் கமலுக்கு தமிழ்நாடு பிராமணர் சங்கம் கேள்வி எழுப்பியுள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.