திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 3 ஜூலை 2018 (18:04 IST)

கமல்ஹாசன் முன்னிலையில் பாடல் பாடிய ராகேஷ் உன்னி : வைரல் வீடியோ

கேரளாவை சேர்ந்த விவசாய தொழிலாளி ராகேஷ் உன்னி நடிகர் கமல்ஹாசன் முன்னிலையில் தனது திறமையை நிரூபித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

 
கடந்த சில நாட்களாக டிவிட்டர்  மற்றும் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலத்தளங்களில் கேரளாவை சேர்ந்த ராகேஷ் உன்னி என்கிற விவசாயி மற்றும் பாடகர், சங்கர் மகா தேவன் பாடிய பாடல்களை பாடிய வீடியோ வைரலானது. அவரின் குரல் மிகவும் இனிமையாக இருந்ததால் பலரும் அவரது வீடியோவை ரீடிவிட் செய்தனர். 
 
இந்த வீடியோவை பாடகரும், இசையமைப்பாளருமான சங்கர் மகாதேவன் பார்த்துவிட்டு, இவரை கண்டுபிடித்து தொலைப்பேசியில் பேசினார். அதன் பின் விரைவில் நாம் இருவரும் ஒன்றாக பாடுவோம் என வாக்குறுதியும் அளித்திருந்தார்.

 
இந்நிலையில், ராகேஷ் உன்னியை சென்னை அழைத்து சங்கர் மகாதேவன், நடிகர் கமல்ஹாசனிடம் அறிமுப்படுத்தினார். ஆழ்வார்பேட்டையில் உள்ள கமலின் இல்லத்தில் அவரை உன்னி கிருஷ்ணன் சந்தித்தார். அதன் பின் அங்கிருந்தவர்கள் முன்னிலையில் ஒரு பாடலை பாடிக்காட்டினார். அதைக்கேட்டு கமல் அவரை பாராட்டிய வீடியோ வெளியாகியுள்ளது.