1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 13 ஏப்ரல் 2024 (09:28 IST)

இன்றைக்குள் வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கப்படும்.. தலைமை தேர்தல் அதிகாரி தகவல்..!

தமிழகத்தில் உள்ள அனைத்து வாக்காளர்களுக்கும் இன்றைக்குள் பூத் ஸ்லிப் வழங்கப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி நம்பிக்கை தெரிவித்துள்ளார். 
 
தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் வாக்கு பதிவிற்கு இன்னும் ஆறு நாள் மட்டுமே இருப்பதால் தேர்தல் அதிகாரிகள் தேர்தல் பணிகளை விறுவிறுப்பாக கவனித்து வருகிறார்கள். 
 
அந்த வகையில் கடந்த சில நாட்களாக பூத் ஸ்லிப் வழங்கும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் அனைத்து வாக்காளர்களுக்கும் வீடு வீடாக சென்று கொடுக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தலைமை தேர்தல் அதிகாரி இது குறித்து கூறிய போது வாக்காளர்களுக்கு பூத் ஸ்லீப் இன்றைக்குள் வழங்கப்படும் என்று நம்பிக்கை தெரிவித்தார். 
 
மேலும் தமிழகத்தின் தேர்தல் பாதுகாப்பிற்காக அண்டை மாநிலங்களிலிருந்து காவல்துறையினர் வருகை தர இருப்பதாகவும் குறிப்பாக கேரளா, ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களிலிருந்து 10,000 போலீசார் ஏப்ரல் 16ஆம் தேதி வரை இருப்பதாகவும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்தார் 
 
மேலும் 17ஆம் தேதி முதல் வாக்குச்சாவடி பாதுகாப்பு பணிக்கு அண்டை மாநில போலீசார் அனுப்பப்படுகிறார்கள் என்றும் 18 ஆம் தேதி காவல்துறை கட்டுப்பாட்டிற்கு அனைத்து வாக்கு சாவடிகளும் வந்துவிடும் என்றும் அவர் கூறினார்.
 
Edited by Mahendran