காமெடி பண்ணாதீங்க!.. தோல்வியை ஒத்துக்கோங்க!.. திமுகவை விளாசிய புளூசட்ட மாறன்..
நடந்து முடிந்த சட்டமன்ற இடைத்தேர்தலில் தாராபுரம் மற்றும் மதுராந்தகம் இரண்டு தொகுதிகளிலும் தவெக வெற்றி பெற்றுள்ளது. பொதுவாக இடைத்தேர்தலில் ஆளும்கட்சி வெற்றி பெறும் என்றாலும் இந்த முறை இரண்டு தொகுதிகளிலும் தவெக, அதிமுக, திமுக என மும்முனை போட்டி நிலவியது.
ஏனெனில் 2026 சட்டமன்றத் தேர்தலில், அதாவது நான்கு மாதங்களுக்கு முன்பு அந்த இரண்டு தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெற்றிருந்தது. அந்த இரண்டு வேட்பாளர்களும் பதவியை ராஜினாமா செய்து விட்டு மீண்டும் அதே தொகுதியில் விசில் சின்னத்தில் போட்டியிட்டனர். ஒருபக்கம் திமுக தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டது. உதயநிதி, கனிமொழி, முக ஸ்டாலின் ஆகியோர் அங்கே தீவிர பிரச்சாரம் செய்தனர். ஆனாலும் விசில் சின்னம் வெற்றி பெற்றது.
தவெக வெற்றி பெற்ற பின் ஒரு அறிக்கையை வெளியிட்ட திமுக தலைவர் முக ஸ்டாலின் இது துரோகத்திற்கு கிடைத்த வெற்றி என்று கூறியிருந்தார். இந்நிலையில், பிரபல
சினிமா மற்றும் அரசியல் விமர்சகர் புளூசட்ட மாறன் எக்ஸ் தளத்தில் தோல்விக்கான காரணத்தை சரி செய்யுங்கள்.. கட்சி மறுசீரமைப்பு செய்யுங்கள்.. பெண்களை தவறாக பேசுவது, விஜயின் தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிப்பது என பழைய திமுகவாக தொடர்ந்தால் தோல்விகளும் தொடரும்..
Gen Z தலைமுறையை கவர தமாசான சாகசங்களில் ஈடுபட வேண்டாம்.. விஜயை தோற்கடிக்க பாஜகவுடன் கூட்டணி வைக்கும் எண்ணம் இருந்தால் அதை நிரந்தரமாக மறந்து விடுங்கள்.. திமுகவை நிரந்தரமாக அஸ்தமிக்க நீங்களே செய்யப்போகும் சேவை அது.. அடுத்து வரும் தேர்தலை தனித்து எதிர்கொள்ளவும், தோல்வியை வெளிப்படையாகவும் ஒப்புக்கொள்ளுங்கள் எனக் கூறியிருக்கிறார்.