1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 16 ஜனவரி 2023 (21:36 IST)

தமிழகத்தில் வறண்ட வானிலை, ஆனால் நீலகிரியில் மட்டும்.... வானிலை அறிவிப்பு

Meteorological
தமிழகத்தில் இன்னும் சில நாட்களுக்கு வறண்ட வானிலையே இருக்கும் என்றும் ஆனால் நீலகிரி மாவட்டத்தில் மட்டும் உறைபனி நீடிக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் வடகிழக்கு பருவம் மழை முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டது என்பதை ஏற்கனவே பார்த்தோம். 
 
இந்த நிலையில் தமிழகத்தில் இனி அடுத்த சில நாட்களில் வறண்ட வானிலை தான் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் படிப்படியாக வெயில் அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது. 
 
ஆனால் அதே நேரத்தில் நீலகிரி மாவட்டத்தில் மட்டும் உறைபனி அதிகமாக இருக்கும் என்றும் அந்த மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் மட்டும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது 
 
Edite by Siva