திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 13 டிசம்பர் 2021 (15:35 IST)

மாரிதாஸ் கைதுக்கு வித்தியாசமாக எதிர்ப்புத் தெரிவித்த நபர்… இணையத்தில் வைரல்!

பிரபல யுடியூபரான மாரிதாஸ் விமான விபத்து குறித்து சர்ச்சையான கருத்துகளைப் பரப்பியதற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.

சமீபத்தில் நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்து குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக பாஜக ஆதரவாளர் மாரிதாஸ் கைது செய்யப்பட்டார் என்றும் அவர் தேனி சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார் என்பதும் தெரிந்ததே. இந்த கைதுக்கு தமிழக பாஜகவினர் கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.

இந்நிலையில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்த கந்தசாமி என்ற நபர் தனது நெற்றியில் மாரிதாஸ் வாழ்க என்று எழுதி வந்திருந்தார். இது சம்மந்தமான அவரின் புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.