திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 11 டிசம்பர் 2021 (17:01 IST)

சிறையில் இருக்கும் மாரிதாஸ் மீண்டும் கைது!

பிரபல யூடியூபர் மாரிதாஸ் ஏற்கனவே ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் நிலையில் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
சமீபத்தில் நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்து குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக பாஜக ஆதரவாளர் மாரிதாஸ் கைது செய்யப்பட்டார் என்றும் அவர் தேனி சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார் என்பதும் தெரிந்ததே. 
 
இந்த நிலையில் தனியார் தொலைக்காட்சி சேனல் ஒன்று அளித்த புகாரின் அடிப்படையில் போர்ஜரி வழக்கில் மாரிதாஸ் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் அவர் தனியார் தொலைக்காட்சி மீது சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததாகவும் இதனை அடுத்து அந்த தொலைக்காட்சி நிர்வாகம் அளித்த புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மீது 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.