வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 12 டிசம்பர் 2021 (14:46 IST)

பாஜகவினர் தொடர் கைது: ஆளுனரை சந்தித்தார் அண்ணாமலை!

பாஜகவினர் தொடர் கைது: ஆளுனரை சந்தித்தார் அண்ணாமலை!
பாஜகவை சேர்ந்தவர்கள் மற்றும் பாஜக ஆதரவாளர்கள் தொடர்ச்சியாக கைது செய்யப்பட்டு வரும் நிலையில் தமிழக ஆளுநரை பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை சந்தித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
பாஜக ஆதரவாளர் மாரிதாஸ் நேற்று கைது செய்யப்பட்டார் என்பதும் அவர் மீது 2 புகார்கள் அடிப்படையில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் சென்னை ராஜ்பவனில் தமிழக ஆளுநர் ரவி அவர்களை தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் சந்தித்தார். இந்த சந்திப்பின்போது அவர் மாரிதாஸ் கைது குறித்தும் மற்ற சில முக்கிய விஷயங்கள் குறித்தும் ஆலோசனை செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது