செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 20 நவம்பர் 2020 (17:37 IST)

கடவுளை கற்பித்தவன் முட்டாள்' கல்வெட்டுகளை அகற்றாவிட்டால்.. பாஜக எச்சரிக்கை

இந்து கோவில்களுக்கு எதிராக கடவுளை கற்பித்தவன் முட்டாள் என்ற கல்வெட்டுகளை உடனடியாக அகற்ற வேண்டும் என தமிழக பாஜக எச்சரிக்கை விடுத்துள்ளதாக பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
இது குறித்து தமிழக பாஜக மாநில துணை தலைவர் கே எஸ் நரேந்திரன் அவர்கள் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் கூறியிருப்பதாவது: கருத்துரிமை, கருத்து சுதந்திரம் எனக் கூறி இந்து கோவில் எதிரிலேயே கடவுளை கற்பித்தவன் முட்டாள், காட்டுமிராண்டி என இந்து மத நம்பிக்கையையும், கடவுளையும் பேசி வைக்கப்பட்டுள்ள கல்வெட்டுகளை உடனடியாக நீக்க வேண்டும்!
 
இல்லையென்றால் அதே கருத்துரிமை, கருத்து சுதந்திரம் உடைய இந்துக்களாகிய நாங்களும் தி.க. மற்றும் அதன் ஆதரவு கட்சியான திமுக கட்சித் தலைவர்களின் வீடுகள் எதிரேயும் கடவுள் நம்பிக்கை இல்லாதவன் ஒரு திருடன், காட்டுமிராண்டி என எழுதி கல்வெட்டுகளை வைப்போம். இவ்வாறு கே.எஸ்.நரேந்திரன் கூறியுள்ளார்.