திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 31 அக்டோபர் 2020 (13:55 IST)

கொரோனா முடிஞ்சதும் ராமர் கோவில் போகலாம்! – யோகி ஆதித்யநாத்!

உத்தர பிரதேசத்தில் நடந்த வால்மீகி ஜெயந்தியில் பேசிய முதல்வர் யோகி ஆதித்யநாத், கொரோனா முடிந்ததும் அனைவரும் ராமர் தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்படும் என கூறியுள்ளார்.

உத்தர பிரதேசத்தின் சித்ரகூட் லாலாபூர் கிராமத்தில் உள்ள வால்மீகி ஆசிரமத்தில் நடைபெற்ற வால்மீகி ஜெயந்தியில் முதல்வர் யோகி ஆதித்யநாத் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர் “அயோத்தி ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழாவில் ஒவ்வொரு உத்தர பிரதேச மக்களும் கலந்து கொள்ள வேண்டும் என விரும்பினோம். ஆனால் கொரோனா தொற்று காரணமாக அது இயலாமல் போனது.

கொரோனா வைரஸ் முடிந்ததும், மாநிலத்தின் ஒவ்வொரு கிராமத்திலிருந்து ராமர் தரிசனம் செய்வதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும்” என்று தெரிவித்துள்ளார்.