புதன், 25 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

முருகப்பெருமானை வணங்குவதற்குரிய நாட்கள் எவை தெரியுமா...?

முருகப்பெருமானை வணங்குவதற்கு சஷ்டி, திதி, கார்த்திகை, திங்கள், செவ்வாய் நாட்கள் மிகவும் உகந்தது. நாம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கடவுளைப் பிடிக்கும். இப்படி எனக்கு மிகவும் பிடித்த முருக கடவுளை எந்த நாட்களில் தரிசனம் செய்யலாம் என்பதை பார்ப்போம்.

நம்மில் பெரும்பாலானோருக்கு முருகப்பெருமானின் வரலாற்றைப் பற்றி தெரியும். அதாவது சிவன், பார்வதிக்கு இரண்டாவது மகனாக பிறந்தவர் தான் முருகப்பெருமான். இவரை நாம் கந்தா, கடம்பா, கதிர்வேலா, குமாரா என இதுபோன்ற பல பெயர்களால் அழைப்போம். 
 
முத்தமிழால் வைதாரையும் வாழ வைப்பான் என்று புலவர் ஒருவரின் பாடல் ஒன்று முருகனை பற்றி கூறுகின்றது. கார்த்திகேயன் என்று அழைக்கக் கூடிய இந்த கந்த பெருமான் பல சக்திகளை தன்னுள் கொண்டவன்.  மேலும் இவரின் வேல் அதீத சக்திகளை கொண்டது. பல தேவர்களின் கூட்டு கலவையே முருகன் என்று  கூறுவார்கள்.
 
இந்த முருகப்பெருமானை வணங்குவதற்கு சஷ்டி, திதி, கார்த்திகை, திங்கள், செவ்வாய் நாட்கள் மிகவும் உகந்தது. இந்நாளில் கந்த பெருமானை விரதம் இருந்து வணங்குவதன் மூலம் அவர் கருணை காட்டி நாம் வேண்டிய வரங்களை தருவார். பெரும்பாலும் குழந்தை வரம் வேண்டிதான் விரதம் இருப்பார்கள்.  
 
மேலும் இந்நாளில் முருகனுக்கு பிடித்த முல்லை, சாமந்தி, ரோஜா போன்ற மலர்களால் முருகனுக்கு மாலையிட்டு வணங்கினால் நாம் வேண்டிய வரத்தை  விரைவில் அளிப்பார்.