எந்த நட்சத்திரத்தில் எந்த கடவுளை வணங்கினால் பலன் கிடைக்கும்...?

Spirituality
Sasikala|
பூசம் நட்சத்திரத்தில் பெருமாளை வணங்கி வந்தால் தீராத வியாதிகள் தீரும். அறுவை சிகிச்சை செய்வதற்கும், டாக்டரை அணுகி வைத்தியம் செய்வதும் செய்யலாம்.
 

அசுவினி நட்சத்திரத்தில் சூரியனை வணங்கிவிட்டு தன்னை விட உயர்ந்தவர்களை, உயர் அதிகாரிகளை சந்தித்தால் காரியம் மிகச் சுலபமாக முடியும்.
 
மிருகசீரிடம் நட்சத்திரத்தில் சிவனை வணங்கி விட்டு வாகனம் வாங்கினால் விருத்தியாகும்.
 
அஸ்தம் நட்சத்திரத்தில் அம்பாளை வணங்கி விட்டு பெண் பார்க்கச் சென்றால் திருமணம் உடனடியாக நிச்சயமாகும்.கிருஷ்ண பகவான் இதே நட்சத்திரத்தில் அம்பாளை வணங்கி விட்டு சத்யபாமாவை பெண் பார்க்க சென்றாராம். இதனாலயே சத்யபாமாவை தடங்கலின்றி மணந்தாராம்.
 
அனுஷம் நட்சத்திரத்தில் சிவனுக்கு அர்ச்சனை செய்துவிட்டு இரும்பு இயந்திரங்கள் ,தளவாடச் சாமான்கள் முதலியவை வாங்கினால் தொழில் நன்கு  வளர்ச்சியுறும்.
 
திருவோணம் நட்சத்திரத்தில் பெருமாளை வணங்கிவிட்டு வெளிநாட்டுப் பயணம் செய்தால் வெற்றியுடன் திரும்பலாம் .நிலம் வாங்குவதற்கும் இது பொருந்தும்.
 
அவிட்டம் நட்சத்திரத்தில் முருகப்பெருமானை வணங்கிவிட்டு வெளியில் சென்றால் விபத்துக்கள் நேராது .அவ்வாறு ஏற்பட்டால் காயமின்றி தப்பிக்கலாம்.
 
மருத்துவர்கள் புனர்பூச நட்சத்திரத்தில் ஶ்ரீரங்கநாதரை வழிபட்டு வந்தால் கைராசிக்காரன் என்ற பெயரை எளிதாகப் பெற்றுவிடலாம்.
 
மாணவர்கள் ஒவ்வொரு மாதமும் புனர்பூச நட்சத்திரத்தில் பெருமாளை வணங்கி அர்ச்சனை செய்தால் படிப்பறிவு அதிகமாக வளரும். தேர்வுகளில் எளிதாக வெற்றி  கிடைக்கும்.
 
மொத்தம் உள்ள 27 நட்சத்திரங்களில் மூலம் நட்சத்திரம் உத்தம நட்சத்திரம் ஆகும் .இந்த நட்சத்திரத்தில் அருகம்புல் மாலை கட்டி விநாயகரை வணங்கிவிட்டு மேற்கொள்ளும் பயணம் யாவும் வெற்றியை தரும்.


இதில் மேலும் படிக்கவும் :