1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. BJP team investigation with dead students parent

அரியலூர் மாணவி இறப்பு: பாஜக குழு பெற்றோரிடம் விசாரணை

அரியலூர் மாணவி இறப்பு
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளி விடுதியில் தங்கிப் படித்த மாணவி உயிரிழந்த விவகாரம் குறித்து பாஜக அமைத்த குழு இன்று விசாரணை நடத்தி வருகிறது.

 
தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே மைக்கேல்பட்டியில் உள்ள தனியார் பள்ளி விடுதியில் தங்கிப் படித்த அரியலூர் வடுகபாளையத்தைச் சேர்ந்த 12ம் வகுப்பு மாணவி, கடந்த மாதம் 19ம் தேதி உயிரிழந்தார். மதம் மாறச் சொல்லிக் கட்டாயப்படுத்தியதால், மாணவி தற்கொலை செய்து கொண்டதாக, பாஜக மற்றும் இந்து அமைப்புகள் குற்றம்சாட்டி, போராட்டம் நடத்தின. இதையடுத்து, பாரதிய ஜனதாக் கட்சி தலைவர் ஜே.பி நட்டா இது குறித்து விசாரணை நடத்த பாஜகவின் மத்திய பிரதேச எம்.பி சந்தியா ராய் தலைமையில் 4 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளார்.
 
இதையடுத்து, பாஜக விசாரணைக்குழு தலைவி சந்தியா ராய், நடிகையும் தெலங்கானா முன்னாள் எம்.பியுமான விஜயசாந்தி, கர்நாடகத்தின் கீதா, மகாராஷ்டிராவின் சித்ரா ஆகிய நான்கு பேர் கொண்ட குழு இன்று விசாரணையைத் தொடங்கியுள்ளது.
 
அரியலூரில் உள்ள மாணவியின் வீட்டிற்கு சென்றுள்ள குழு, பெற்றோர், சகோதரர்கள், உறவினர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவி இறப்பு குறித்த வழக்கை சிபிஐ விசாரிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் ப்ரியாங்க் கனூங்கோ தலைமையிலான குழு தஞ்சாவூர் மற்றும் அரியலூரில் நேற்று விசாரணை நடத்தினர்.
About Writer
Sugapriya Prakash