1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : வெள்ளி, 11 செப்டம்பர் 2020 (19:21 IST)

ஆந்திராவில் இன்று ஒரே நாளில் 9,999 பேருக்கு கொரோனா பாதிப்பு

ஆந்திர மாநிலத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வந்த நிலையில் இன்று 9,999 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனை அடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5,47,686ஆக உயர்ந்துள்ளதாகவும் ஆந்திர மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது
 
மேலும் ஆந்திராவில் இன்று மட்டும் கொரோனாவில் இருந்து குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 11069 என்றும் இதனை அடுத்து மொத்தம் 4,46,716 பேர் கொரோனாவால் இருந்து குணம் அடைந்து உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
மேலும் ஆந்திராவில் இன்று ஒரே நாளில் 77 பேர் கொரோனாவால் பலியாகியுள்ளனர் என்பதும் மொத்தம் 4779 பேர் பலியாகியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
ஆந்திர அரசு கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இன்று மட்டும் ஆந்திராவில் 71137 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது