துணை முதல்வர் பதவி வேண்டும்: திமுகவிடம் பேரம் பேசும் காங்கிரஸ்!
தமிழகத்தில் சட்டமன்ற பொதுத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில் கடந்த பாராளுமன்ற தேர்தலில் இருந்த கூட்டணி சட்டமன்ற தேர்தலிலும் நீடிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது
ஏற்கனவே ஒரு பக்கம் அதிமுக மற்றும் பாஜக இடையே பிணக்கு ஏற்பட்டு இருக்கும் நிலையில் இன்னொரு பக்கம் திமுகவிடம் காங்கிரஸ் கேட்கும் தொகுதிகள் கிடைக்குமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. எனவே இரண்டு கூட்டணியிலும் சில விரிசல் ஏற்படலாம் எனக் கருதப்படுகிறது
இந்த நிலையில் திடீரென காங்கிரஸ் கட்சி தங்களுக்கு துணை முதல்வர் பதவி வேண்டும் என்று நிபந்தனை விதித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வரும் சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸுக்கு துணை முதல்வர் பதவி வேண்டும் என சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் தீர்மானம் ஏற்றப்பட்டுள்ளது
இந்த தீர்மானம் காங்கிரஸ் மேலிடத் தலைவர்களின் அனுமதி இன்றி இயற்றப்பட வாய்ப்பில்லை என்று கூறப்படுவதால் திமுக கூட்டணியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது