1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 3 டிசம்பர் 2020 (10:09 IST)

நடராஜன் வீட்டில் பாரதமாதா புகைப்படம்: பாஜக பிரமுகரின் டுவீட்!

நடராஜன் வீட்டில் பாரதமாதா புகைப்படம்: பாஜக பிரமுகரின் டுவீட்!
இந்திய கிரிக்கெட் அணியில் முதல் முறையாக இணைந்து முதல் சர்வதேச போட்டியை நேற்று விளையாடிய தமிழகத்தை சேர்ந்த நடராஜன் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதனை அடுத்து அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வந்தது என்பதை பார்த்தோம் 
 
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, திமுக தலைவர் முக ஸ்டாலின் உள்பட பலர் நடராஜனுக்கு வாழ்த்து கூறி வந்த நிலையில் திடீரென நடராஜன் சமூகத்தைச் சார்ந்தவர்கள் தங்கள் சமூகத்தை சேர்ந்த நடராஜனுக்கு வாழ்த்துக்கள் என ஜாதி அரசியல் செய்தனர் இதனால் டுவிட்டரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது 
 
இந்த நிலையில் விளையாட்டிலும் ஜாதி அரசியல் செய்பவருக்கு பாஜக பிரமுகர் எஸ்.ஜி.சூர்யா சவுக்கடி கொடுக்கும் வகையில் ஒரு புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். அதில் மேலும் அதில் கூறியிருப்பதாவது: நடராஜனின் வீட்டில் பாரதமாதா புகைப்படம் இருக்கிறது. எனவே அவரை ஜாதியை வைத்து பிரித்து அரசியல் செய்பவர்களுக்கு இது சரியான சவுக்கடி. கடையை காலி பண்ணிவிட்டு கெளம்புங்க, கெளம்புங்க காத்து வரட்டும்’ என்று பதிவு செய்துள்ளார்/ இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது