செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 10 ஜூன் 2021 (12:25 IST)

மூதாட்டியை கட்டிப்போட்டு கொள்ளை; மாஸ்க்கை கழற்றி பார்த்தால் அதிர்ச்சி! – மதுரையில் பரபரப்பு!

உசிலம்பட்டியில் கொரோனா பரிசோதனை செய்வது போல வந்து மூதாட்டியிடம் நகை கொள்ளையடித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

தமிழகம் முழுவதும் கொரோனா ஊரடங்கு உள்ள நிலையில் மதுரையில் சொந்த பாட்டியிடமே பேத்தி திருடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை உசிலம்பட்டி அருகே உள்ள மேக்கிலார்ப்பட்டியை சேர்ந்தவர் மூதாட்டி முனியம்மாள். மாற்றுத்திறனாளியான இவர் தனது வீட்டில் தனியாக இருந்துள்ளார்.

இந்நிலையில் முனியம்மாள் வீட்டிற்கு கொரோனா பரிசோதனை செய்ய வந்துள்ளதாக இரட்டை மாஸ்க் அணிந்த பெண் ஒருவர் நுழைந்துள்ளார். பின்னர் மூதாட்டியை கட்டிப்போட்ட அந்த பெண் அவரிடம் இருந்த 11 சவரன் நகையை திருடியுள்ளார். மாஸ்க்கை அகற்றி பார்த்தபோது அதிர்ச்சி காத்திருந்துள்ளது. மாஸ்க் போட்டு வந்து நகை திருடியது முனியம்மாளின் சொந்த பேத்தி உமாதேவி என தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.