பேரூராட்சி அலுவலகத்தில் பிரதமர் மோடி படம்! – பாஜக நிர்வாகி கைது!
கோவையில் பேரூராட்சி அலுவலகத்தில் வலுகட்டாயமாக பிரதமர் மோடியின் படத்தை வைக்க முயன்ற பாஜக நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார்.
கோவை மாவட்டம் பூலுவப்பட்டியில் அப்பகுதியின் பேரூராட்சி அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்திற்கு அப்பகுதி பாஜக அமைப்பு சாரா அணி மாவட்ட செயலாளர் பாஸ்கரன் சென்றுள்ளார். பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படத்தையும் எடுத்து சென்ற அவர் அதை அலுவலகத்தில் மாட்ட வேண்டும் என கூறியுள்ளார்.
ஆனால் அதற்கு அலுவலக ஊழியர்கள் மறுத்ததால் அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இதனால் பாஜக நிர்வாகி பாஸ்கரன் மீது போலீஸார் அத்துமீறி நுழைதல், மிரட்டுதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர்.