1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 11 ஏப்ரல் 2022 (11:51 IST)

மத்திய பல்கலைக்கழக நுழைவுத்தேர்வுக்கு எதிராக தீர்மானம்! – பாஜக வெளிநடப்பு!

தமிழக சட்டமன்றத்தில் மத்திய பல்கலைக்கழக நுழைவுத் தேர்வுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக வெளிநடப்பு செய்துள்ளது.

மத்திய பல்கலைகழகங்களில் நடத்தப்படும் வகுப்புகளில் சேர தேசிய அளவிலான பொது நுழைவுத்தேர்வு இனி நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்ததற்கு பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில் இன்று தமிழக சட்டமன்றத்தில் மத்திய பல்கலைக்கழக நுழைவு தேர்வான க்யூட் தேர்வுக்கு எதிராக தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்த தீர்மானத்திற்கு திமுக கூட்டணி கட்சிகள் ஆதரவு தெரிவித்த நிலையில், க்யூட் தேர்வுக்கு எதிரான தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்துள்ளனர்.