தீபாவளி ரேஸில் இருந்தும் பின் வாங்குகிறதா எனிமி?
எனிமி திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் இப்போது பின்வாங்க உள்ளதாக சொல்லப்படுகிறது.
இயக்குனர் பாலாவின் அவன் இவன் படத்தில் சேர்ந்து நடித்த விஷால் – ஆர்யா நீண்ட ஆண்டுகள் கழித்து மீண்டும் ஒன்றிணையும் படம் எனிமி. ஆனந்த ஷங்கர் இயக்கும் இந்த படத்திற்கு தமன் இசையமைக்கிறார். நீண்ட ஆண்டுகள் கழித்து இருவரும் இணையும் படம் என்பதால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த படத்தில் ஆர்யா வில்லனாக நடிப்பதாக சொல்லப்படுகிறது.
இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் ஆயுத பூஜை அன்று ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் பின்னர் தீபாவளிக்கு ரிலிஸ் மாற்றப்பட்டது. ஆனால் இப்போது தீபாவளிக்கும் வெளியாக வாய்ப்பில்லை என சொல்லப்படுகிறது. விநியோகஸ்தர் படத்தை ரிலீஸ் செய்வதில் இருந்து பின்வாங்கியதால் சிக்கல் எழுந்துள்ளதாக சொல்லப்படுகிறது.