திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: வெள்ளி, 15 அக்டோபர் 2021 (11:31 IST)

தெலுங்கிலும் தீபாவளிக்கு ரிலீசாகும் அண்ணாத்த: சன் பிக்சர்ஸ் அறிவிப்பு!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த அண்ணாத்த திரைப்படத்தின் டீசர் நேற்று வெளியானது என்பதும் இந்த டீசர் மிகப்பெரிய அளவில் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பதும் தெரிந்ததே. 
 
இந்த நிலையில் அண்ணாத்த திரைப்படம் வரும் தீபாவளி திருநாளில் வெளியாக இருப்பதாக ஏற்கனவே அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த படத்தின் இறுதிகட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 
 
இந்த நிலையில் தமிழில் தீபாவளி அன்று வெளியாக இருக்கும் அண்ணாத்த திரைப்படம் அதே நாளில் தெலுங்கிலும் வெளியாக இருப்பதாக சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது. தெலுங்கு டப்பிங் பணிகள் ஏற்கனவே நடைபெற்று முடிந்து விட்டதாகவும் இந்த படத்தின் தெலுங்கு ரிலீசுக்கு தேவையான பணிகள் அனைத்தும் முடிந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன
 
ரஜினிகாந்த், கீர்த்தி சுரேஷ், நயன்தாரா ஆகியோர் தெலுங்கிலும் பிரபலம் என்பதால் இந்த படம் தெலுங்கிலும் ஹிட்டாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.