வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 26 செப்டம்பர் 2023 (17:33 IST)

அதிமுக விலகியதால் மெகா கூட்டணியை அமைக்கிறதா பாஜக? அண்ணாமலை திட்டம்..!

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் தமிழகத்தில் அதிமுக தலைமையிலான கூட்டணியிலும் பாஜக இல்லை என்றும் அறிவித்துள்ளது. 
 
இந்த நிலையில் அதிமுக மற்றும் திமுக இல்லாத மெகா கூட்டணியை அமைக்க தமிழக பாஜக திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
பாஜக தலைமையில் அமைய இருக்கும் புதிய கூட்டணியில் தேமுதிக, பாமக,  கொங்கு மக்கள் தேச கட்சி, மனிதநேய மக்கள் கட்சி,  தமிழ் மாநில காங்கிரஸ், பாரிவேந்தர் மக்கள் கட்சி,  தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், மூவேந்தர் முன்னேற்ற கழகம், அகில இந்திய மூவேந்தர் முன்னேற்ற கழகம்,  பசும்பொன் தேசிய கழகம்,  அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்,  அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி,  புதிய தமிழகம்  உள்ளிட்ட கட்சிகளை இணைத்து மெகா கூட்டணி அமைக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது எந்த அளவுக்கு சாத்தியம் என்பது போக போக தான் தெரியும்.
 
Edited by Siva