வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 26 செப்டம்பர் 2023 (13:32 IST)

அதிமுக கூட்டணியில் தொடருவோம்: புரட்சி பாரதம் கட்சி அறிவிப்பு

பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று அதிமுக அறிவித்த நிலையில் தேசிய அளவில் என்.டி.ஏ கூட்டணியிலிருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளது. இந்த நிலையில் அதிமுக கூட்டணியில் தொடர்வோம் என புரட்சி பாரதம் கட்சி தெரிவித்துள்ளது. 
 
எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக கூட்டணியில் தொகுதி உடன்பாடு பேச்சுவார்த்தை நடத்தி போட்டியிடுவோம் என்று புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் பூவே ஜெகன்மூர்த்தி தெரிவித்துள்ளார். 
 
தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் இந்தியா கூட்டணியில் புரட்சி பாரதம் இடம்பெறாது என்றும் அவர் உறுதிபடக் கூறியுள்ளார். 
 
இதேபோல் இன்னும் சில கட்சிகள் அதிமுக கூட்டணியில் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுவதால் பாஜக தனித்துவிடப்படுமா? அல்லது அக்கட்சி தனியாக ஒரு கூட்டணி அமைக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
 

Edited by Mahendran