புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 5 அக்டோபர் 2023 (13:04 IST)

இன்று பிற்பகல் 2 மணிக்கு அண்ணாமலை தலைமையில் ஆலோசனை கூட்டம்: பாஜக அறிவிப்பு..!

இன்று பிற்பகல் 2 மணிக்கு பாஜக உயர்நிலைக் குழு கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை, தி.நகரில் உள்ள பாஜக தலைமையகமான கமலாலயத்தில் அண்ணாமலை தலைமையில் பாஜக உயர்நிலைக் குழு கூட்டம் நடைபெறும் என்றும், இந்த கூட்டத்தில் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா, பொன்.ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது பாஜக மாநில நிர்வாகிகள், மாவட்டத் தலைவர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெறும் நிலையில், பிற்பகலில் பாஜக உயர்நிலை கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுக உடன் கூட்டணி முறிந்த நிலையில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை செய்வதற்காக இன்று காலை பாஜக ஆலோசனை கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த கூட்டத்திற்கு அண்ணாமலை வரவில்லை என்பதால், கேசவ விநாயகம், எச்.ராஜா ஆகியோர் தலைமையில் பாஜக கூட்டம் நடைபெற்றது.

மேலும் அண்ணாமலைக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு உள்ளதால் அவரது நடைபயணம் வரும் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் இன்று நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என கூறப்படுகிறது.

Edited by Mahendran