திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வியாழன், 5 அக்டோபர் 2023 (12:57 IST)

பாஜக அரசின் பழிவாங்கும் நடவடிக்கை - முதல்வர் மு.க.ஸ்டாலின்

ஜெகத்ரட்சகன் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வரும் நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

வரி ஏய்ப்பு புகாரில் சிக்கியுள்ள திமுக எம்பி ஜெகத்ரட்சகன் வீடு, அவருக்குச் சொந்தமான ஓட்டல், பல் மருத்துவமனை, மருத்துவ கல்லூரி உள்ளிட்ட 50க்கும் அதிகமான இடங்களில் இன்று வருமான வரித்துறையினர் சோதனை  நடத்தி வருகின்றனர்.

இன்று காலை முதல் ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடந்து வருவது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆம் ஆத்மி அமைச்சர் சஞ்சய் சிங் கைது, ஜெகத்ரட்சகன் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை சோதனை ஆகியவை பாஜக அரசின் பழிவாங்கும் நடவடிக்கை என்று தெரிவித்துள்ளார். மேலும், விசாரணை அமைப்புகளை மத்திய அரசு தவறாகப் பயன்படுத்துவதற்கு இதுவே  எடுத்துக்காட்டு என்று கூறியுள்ளார்.