திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : ஞாயிறு, 24 டிசம்பர் 2017 (18:13 IST)

நோட்டாவிடம் தோல்வியடைந்த பாஜக

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட்ட பாஜக நோட்டாவுக்கு கிடைத்த வாக்குகளை விட மிக குறைவாக பெற்று படுமோசமான தோல்வியை சந்தித்துள்ளது.

 
19 சுற்றுகளாக நடைபெற்ற ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை தற்போது நிறைவடைந்தது. சுயேட்சையாக போட்டியிட்ட டிடிவி தினகரன் 89,013 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதிமுக சார்பில் போட்டியிட்ட மதுசூதனன் 48,306 வாக்குகள் பெற்று இரண்டாம் இடம் பிடித்தார். திமுக சார்பில் போட்டியிட்ட மருதுகணேஷ் 24,651 வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டார்.
 
நாம் தமிழர் சார்பில் போட்டியிட்ட கலைக்கோட்டுதயம் 3,802 வாக்குகள் பெற்று நான்காம் இடம்பிடித்தார். பாஜக சார்பில் போட்டியிட்ட கரு.நாகராஜன் 1,368 வாக்குகள் பெற்று கடைசி இடம்பிடித்தார். நோட்டாவில் 2,348 வாக்குகள் பதிவாகியுள்ளது.
 
இந்நிலையில் பாஜக நோட்டாவில் பதிவான வாக்குகளை விட மிக குறைவாக வாக்குகள் பெற்றுள்ளது. இதுகுறித்து சமூக வலைதளங்களில் பலரும் பாஜக கேலி செய்து வருகின்றனர்.