செவ்வாய், 14 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : ஞாயிறு, 24 டிசம்பர் 2017 (18:17 IST)

ஆர்.கே.நகரில் திமுகவுக்கு டெபாசிட் இழப்பு!

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட மருதுகணேஷ் டெபாசிட் இழந்தார்.

 
19 சுற்றுகளாக நடைபெற்ற ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை தற்போது நிறைவடைந்தது. சுயேட்சையாக போட்டியிட்ட டிடிவி தினகரன் 89,013 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதிமுக சார்பில் போட்டியிட்ட மதுசூதனன் 48,306 வாக்குகள் பெற்று இரண்டாம் இடம் பிடித்தார். திமுக சார்பில் போட்டியிட்ட மருதுகணேஷ் 24,651 வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டார்.
 
2016ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஜெயலலிதா வெற்றி பெற்றதை விட அதிக வாக்குகள் வித்தியாசத்தில் டிடிவி தினகரன் வெற்றி பெற்றுள்ளார். திமுக டெபாசிட் இழந்து பெரும் தோல்வியை சந்தித்துள்ளது. அதேபோல்,நாம் தமிழர், பாஜக கட்சி வேட்பாளர்களும் டெபாசிட் இழந்தனர்.