1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. DMK will never win at rk nagar, ADMK MP Thambidurai

தினகரனின் வெற்றி அதிமுகவின் வெற்றியா? என்ன சொல்கிறார் தம்பிதுரை

ஆர்.கே.நகர்
அதிமுக கோட்டை ஆர்.கே.நகரில் திமுகவால் வெல்லவே முடியாது என்பதைத்தான் தேர்தல் முடிவுகள் வெளிக்காட்டியுள்ளதாக தம்பிதுரை கூறியுள்ளார்.

 
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று கொண்டு இருக்கிறது. தினகரன் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. இரண்டாம் இடத்தில் அதிமுக வேட்பாளர் மதுசூதனனை விட 31 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று முன்னியில் உள்ளார். அரசியல் தலைவர்கள் பலரும் தங்களது கருத்தை தெரிவித்து வருகின்றனர்.
 
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக அமைச்சர் தம்பிதுரை, ஜெயலலிதாவின் கோட்டையான ஆர்.கே.நகரில் திமுகவால் எப்போதுமே வெற்றி பெற முடியாது என்பதைத்தான் இந்த தேர்தல் முடிவுகள் வெளிக்காட்டியுள்ளது என்று கூறியுள்ளார். 
அடுத்த கட்டுரையில்
இமாச்சல பிரதேச முதல்வரை தேர்ந்தெடுத்த பாஜக மேலிடம்....