கொரோனாவால் தமிழக பள்ளிகளுக்கும் விடுமுறை: அதிரடி அறிவிப்பு
கொரோனா வைரஸ் நாடு முழுவதும் மிக வேகமாக பரவி வருவதை அடுத்து கேரளா, புதுவை, டெல்லி உள்பட ஒருசில மாநிலங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. முழு ஆண்டு தேர்வுகளும் ஒரு சில வகுப்புகளுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
முன்கூட்டியே பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்படுவதன் மூலம் கொரோனா வைரசை மாணவர்களுக்கு தொற்றாமல் கட்டுப்படுத்தலாம் என்பது அரசுகளின் எண்ணமாக உள்ளது
இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் இருப்பதால் பள்ளிகளுக்க்8உ விடுமுறை அளிக்க வாய்ப்பு இல்லை என்று சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்த ஒரு வழக்கில் தமிழக அரசு தனது வாதமாக வைத்தது
இந்த நிலையில் தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் எல்கேஜி யுகேஜி படிக்கும் மாணவர்களுக்கு விடுமுறை என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதேபோல் கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தேனி, கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் மாவட்டங்களில் ஐந்தாம் வகுப்பு வரை விடுமுறை என்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மார்ச் 16 ஆம் தேதி முதல் 31ம் ஆம் தேதி வரை விடுமுறை என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது
இதனை அடுத்து வரும் திங்கள் முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது