புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 18 மார்ச் 2020 (14:14 IST)

காஞ்சி மடத்தில் அவமதிக்கப்பட்டாரா பாஜக தலைவர் – சர்ச்சைப் புகைப்படம் !

தமிழக பாஜக தலைவராக புதிதாகப் பதவியேற்றுள்ள எல் முருகன் காஞ்சி சங்கரமடத்தில் அவமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சௌந்தர்ராஜன் அவர்கள் கடந்த ஆண்டு தெலுங்கானா மாநில கவர்னராக நியமனம் செய்யப்பட்டார். இதனையடுத்து கடந்த சில மாதங்களாக தமிழக பாஜக தலைவர் பதவி காலியாக இருந்தது.

இந்த பதவியை பிடிக்க ஹெச் ராஜா, பொன் ராதாகிருஷ்ணன், இல கணேசன், வானதி ஸ்ரீனிவாசன், எஸ்வி சேகர் உள்பட பலர் முயற்சித்து வந்தனர். இந்த நிலையில் திடீரென தற்போது தமிழக பாஜக தலைவராக எல்.முருகன் என்பவர் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாஜக தேசிய பொதுச்செயலாளர் அருண் சிங் அவர்கள் சற்று முன் இந்த அறிவிப்பை வெளியிட்டார். இதனையடுத்து முருகன் பாஜக தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது 

இந்நிலையில் தலைவராக பொறுப்பேற்று இருக்கும் காஞ்சி சங்கரமடத்துக்கு ஆசி வாங்க சென்றார். அப்போது தன் அறையில் அவரை சந்தித்த விஜயேந்திரர் முருகனையும் அவர் கூட வந்தவர்களையும் நிற்கவைத்தே பேசியுள்ளார். இது சம்மந்தமானப் புகைப்படம் சமூகவலைதளங்களில் பரவி வருகிறது.